தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் விமலுக்கும், டைரக்டர் சீனு ராமசாமிக்கும் இடையே மோதல் என்ற செய்தி காட்டுத்தீ போல கோடம்பாக்கம் முழுக்க பரவிக் கிடக்கிறது. ஆனால் அதனை டைரக்டர் சீனு ராமசாமி மறுத்துள்ளார். தென்மேற்கு பருவக் காற்று படத்தை இயக்கியவர் டைரக்டர் சீனு ராமசாமி. இப்படத்திற்கு மூன்று தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் சீனு ராமசாமி அடுத்து நீர்ப்பறவைகள் என்ற புதிய படமொன்றை இயக்குகிறார். இதில் கதாநாயகனாக நடிக்க விமலை அணுகியதாககவும் அவர் கதையை மாற்றச் சொன்னதாகவும், அதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி சீனு ராமசாமி அளித்துள்ள பேட்டியில், எனக்கும் விமலுக்கும் மோதல் எதுவும் இல்லை. என்னுடைய அன்பு தம்பி அவர். விமல் கைவசம் நிறைய படங்கள் இருப்பதால், அவரிடம் கால்ஷீட் இல்லை என்று எனக்கு தெரியும். எனவே எனது படத்தில் விமலுக்கு பதிலாக விஷ்ணுவை கதாநாயகனாக்கி உள்ளேன். இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது என்று கூறியுள்ளார்.