'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் நிலவும் பிரச்னைகள், ஊழல்கள் என... பல விஷயங்களை முன்வைக்க அதுவே தமிழக அரசியலில் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது. தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவராக கமலுக்கு எதிராக ஆவேசமாக பேசி வருகின்றனர். கமலும் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
கமல்ஹாசனின் சகோதரரான சாருஹாசனும், கமலுக்கு ஆதரவாக நேற்று குரல் கொடுத்தார். "ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட ஜெயலலிதா பேரில் ஆட்சி செய்கிறீர்கள், சிறைக்கு சென்றுள்ள சசிகலாவின் சொல்படி ஆட்சி செய்கிறீர்கள்... என்று தன் பங்கிற்கு பேஸ்புக்கில் அமைச்சர்களை விளாசினார்.
இந்நிலையில் கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்று சாருஹாசன் கூறியிருக்கிறார். அவர் தனது பேஸ்புக்கில், "கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு நல்லது தான். ஆனால் அவர் வந்து யாரையும் திருத்த முடியாது. தமிழ்மக்கள், பெரியாரின் நேர்மையை ஒப்புக் கொள்ளாதவர்கள்" என்று கூறியுள்ளார்.