ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அம்மா கணக்கு படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து வருகிறார் ரேவதி. அந்த வகையில், தனுஷ் இயக்கிய ப.பாண்டி படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்த அவர், தற்போது அழியாத கோலங்கள், குலேபகாவலி ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்த படங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடிக்கும் ரேவதி, தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
அதில், நாகசைதன்யா நாயகனாக நடிக்கும் யுத்தம் சரணம் படமும் ஒன்று. முதன்முதலாக அவர், ஆக்சன் கதையில் நடிக்கும் இந்த படத்தை ஆர்.வி.மாரிமுத்து இயக்குகிறார். லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார். மேலும், பிரமோற்சவம் தெலுங்கு படத்தில் மகேஷ்பாபுவுக்கு அம்மாவாக நடித்த ரேவதி, யுத்தம் சரணம் படத்தில் நாகசைதன்யாவுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.