இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெறியைத் தொடர்ந்து விஜய்-அட்லி கூட்டணி அமைத்துள்ள படம் மெர்சல். முதன்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜய்யை ஜல்லிக்கட்டு வீரர் போன்று வெளிப்படுத்தும் பர்ஸ்ட் வெளியான போது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய உற்சாகம் நிலவியது. பல முன்னணி நடிகர்களின் பட போஸ்டர்களை முறியடிக்கும் அளவுக்கு மெர்சல் விஜய் போஸ்டரை டிரன்டிங் செய்தனர்.
மேலும், இன்றைய தினம் மெர்சல் படம் குறித்த ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியாகயிருப்பதாக நேற்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் டுவிட்டரில் அறிவித்திருக்கிறது. அது, மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீடு குறித்த தகவலா? இல்லை பர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய தகவலா? என்பது இன்று தெரிந்து விடும். ஆக, மெர்சல் குறித்து வெளியாகும் புதிய தகவலை இணையதளங்களில் பெரிய அளவில் அப்டேட் செய்வதற்கு நேற்றே ஆயத்தமாகி விட்டனர் விஜய் ரசிகர்கள்.