பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
அனிருத் இசையில் உருவான 3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, கத்தி, வேதாளம், ரெமோ என பல படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. அனிருத், தற்போது அஜித்தின் விவேகம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருப்பவர், அடுத்தபடியாக விஜய்யின் 62வது படத்திற்கும் இசையமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அஜித்தின் விவேகம் படத்தில் இடம்பெற்ற சர்வைவா, தலை விடுதலை ஆகிய இரண்டு பாடல்களும் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகி விட்டன. நேற்று மூன்றாவதாக காதலாட பாடலும் வெளியாகியுள்ளது. அந்த பாடலை கர்நாடக இசையில் மெலோடி பாடலாக உருவாக்கியிருக்கிறார் அனிருத். இதையடுத்து விவேகம் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதோடு, இந்த மூன்று பாடல்களுமே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதை அடுத்து, அனிருத்தை தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார் அஜித். அதைக்கேட்ட அனிருத், இன்ப அதிர்ச்சியில் உள்ளார்.