Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவில் நடிக்க வந்தால் வெட்கத்தை வீட்டிலேயே மூட்டை கட்டி வைத்து விட வேண்டும்: கிருஷ்ணா

21 ஜூலை, 2017 - 06:49 IST
எழுத்தின் அளவு:
Krishna-shares-his-cinema-experience

அஞ்சலியில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவங்கி, சினிமாவில் சில சொதப்பல்களை செய்திருந்தாலும், கழுகு போன்ற சில நல்ல படங்களையும் தந்திருக்கிறார், கிருஷ்ணா. நமக்காக, அவர் அளித்த பேட்டி?

பண்டிகை படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து...


யாமிருக்கு பயமேன் படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது; அதன் பின், இந்த படத்துக்கு கிடைத்துள்ளது; இதற்காக ரசிகர்களுக்கு நன்றி.



பண்டிகை படம் அனுபவம்?


இயக்குனர் பெரோஸ், என் மீது நம்பிக்கை வைத்து, நடிக்க வைத்தார். இதற்கு முன், இப்படி ஒரு சண்டை படத்தில் நான் நடித்ததில்லை. அதனால் ரொம்ப பயந்தேன். இயக்குனர் தான், தைரியம் கொடுத்து, நடிக்க வைத்தார். படப்பிடிப்பு முடிந்தபோது, பல நாட்கள், காயத்துடன் தான், வீட்டிற்கு சென்றேன்.


இந்த படத்தில் ஜோடியாக நடித்த ஆனந்திக்கு, பீர் வாங்கி கொடுத்தீங்கலாமே; உண்மை தானா?


அப்படியெல்லாம் எதுவுமில்லை; அந்த படத்தில், அப்படி ஒரு வசனம் இருந்தது. அவ்வளவு தான்; ஆனந்தி, ரொம்ப சின்ன பொண்ணு; நமக்கு செட்டாகாது. அதனால், என் காசை வீணாக்கவிரும்பவில்லை.


நீங்களாக, யாரிடமாவது சென்று, நடிக்க வாய்ப்பு கேட்டது உண்டா?


சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் களமிறங்கியாகி விட்டது. அதனால், வெட்கத்தை எல்லாம், வீட்டிலேயே மூட்டை கட்டி வைத்து விட்டு வந்தால் தான் ஜெயிக்க முடியும். நானே, பலரிடமும் சென்று, நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறேன்.


நடிப்பை விட்டால், பிழைத்துக் கொள்ள கைவசம் வேறு எதுவும் தெரியுமா?


அமெரிக்காவில், எம்.பி.ஏ., படித்தவன் நான். கைவசம், தொழில் இருக்கு; அதனால், பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், நான் எதைச் செய்தாலும்,


சினிமாவில் தான் செய்வேன்.


உங்க அண்ணன் விஷ்ணு வர்தன், அஜித்தை வைத்து, படம் இயக்கினார்; அதில் உங்களுக்கு வாய்ப்பு தரவில்லையே?


அஜித்தை வைத்து, பில்லா, ஆரம்பம் படங்களை இயக்கினார். அந்த படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டேன்; தரவில்லை. ஆரம்பம் படத்தில், ராணா நடித்த கேரக்டரை எனக்கு கேட்டேன்; கொடுக்கவில்லை. கண்டிப்பாக உனக்கு வாய்ப்பு தருகிறேன் என, என்னை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.


ஹீரோயின்களுக்கு மருத்துவ, டிப்ஸ் கொடுப்பதாக....?


எனக்கு, டாக்டர்கள் கூறும் சில விஷயங்களை, உடன் நடிக்கும் நடிகையருடன் பகிர்ந்து கொள்கிறேன்; அவ்வளவு தான். அவர்கள் கஷ்டப்படும்போது, என்னால் தாங்க முடியாது. சுனைனாவுடன் ஒரு படத்தில் நடிக்கும் போது, ஜலதோஷத்தால் சிரமப்பட்டார். அதற்கு சில, டிப்ஸ் கொடுத்தேன். ஆனந்திக்கும், மருத்துவ டிப்ஸ் கொடுத்தேன்.


உங்க கனவு ஹீரோயின் யாரு?


அனுஷ்கா தான்; ஆனால், பாகுபலிக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. ஆரம்பத்தில் இருந்தே, அனுஷ்காவின் தீவிர ரசிகன் நான். அவங்களோட தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும்.


ஹீரோயின்களிடம் கடலை போடுகிறீர்களாமே?


படப்பிடிப்பு இடைவேளையில், ஜாலியாக அரட்டை அடிப்பேன். படப்பிடிப்பு முடிந்ததும், கிளம்பி விடுவேன். மணிக்கணக்கில் மொபைல் போனில் பேசுவது, அவங்க ரூமுக்கு போய், டார்ச்சர் செய்வது போன்ற செயல்களில் எல்லாம் ஈடுபட மாட்டேன்.


பிரபலமான ஒரு நடிகையை, நீங்கள் காதலிப்பதாக, செய்திகள் அடிபடுகிறதே?


இரண்டு படங்களில் ஒரு நடிகையுடன் சேர்ந்து நடித்தால், இப்படி கிளப்பி விட்டு விடுகின்றனர். ஸ்வாதிக்கும், எனக்கும் கிசு கிசு எழுதினர். அதன்பின், சுனைனா என, வதந்தி தொடருகிறது. என்னுடன் நடிக்கும் எல்லா ஹீரோயின்களுடனும் ஜாலியாக பேசி, பழகிட்டு இருக்கேன்; இது தப்பா?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in