ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கரீனா கபூரை கடுப்பேற்றும் வகையில் தொடர்ந்து செய்திகள் வெளியாவ தால், கடுமையான கோபத்தில் இருக்கிறார், அவர். 'குழந்தை பிறந்ததால், கரீனா, குண்டாகி விட்டார். இடுப்பு அளவை குறைப்பதற்காக, தினமும், ஜிம்முக்கு செல்கிறார்' என, சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. மும்பையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இது குறித்த தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், அவர்.'குழந்தை பிறந்தால், எந்த பெண்ணுக்குமே உடல் எடை அதிகரிப்பது என்பது, இயற்கையானது. எனக்கு, 36 வயதாகி விட்டது. இனிமேல், 'ஜீரோ சைஸ்' இடுப்புடன் நடிக்க வேண்டிய அவசியம், எனக்கு இல்லை' என, புலம்பித் தீர்த்தார், கரீனா.