ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் உருவாகி உள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், தனுஷ், அமலா பால், கஜோல், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த ஒரு மாதத்திற்குள்ளாக யு டியூபில் 1 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. விஐபி-2 ஜூலை 28-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் விஐபி 2 ரிலீஸாவதால் சென்சார் பணி தாமதமாகும் என்று தெரிகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேசமயம் விஐபி-2 படத்திற்கு யு சான்று கிடைக்கவில்லை என்றும், மறுதணிக்கைக்கு அனுப்பப்பட இருப்பதால் ரிலீஸ் தாமதமாகும் என்றும் தகவல்கள் அடிபடுகின்றன.