Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கஞ்சா கருப்பு படத்தில் வெளிநாட்டு நட்சத்திரங்கள்!

04 ஜன, 2012 - 14:24 IST
எழுத்தின் அளவு:

இன்றைய காமெடி நடிகர்கள் வரிசையில் தன் எதார்த்த நடிப்பாலும், எல்லாரையும் கவரும் சிரிப்பாலும் ரசிகர்களை சிரிக்க வைத்து கொண்டு இருப்பவர் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. டைரக்டர் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட கஞ்சா கருப்பு இன்று டாப்-5 காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுநாள்வரை காமெடி நடிகராக இருந்து வந்த இவரை, ஒருவர் ஹீரோவாக்கியுள்ளார். புதுமுக இயக்குநர் தனசேகர், "மன்னார் வளைகுடா" என்ற பெயரில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். அதில் கஞ்சா கருப்பு தான் ஹீரோ.

மனித உணர்வுகளை மையமாக வைத்து கடல்சார்ந்த கதையை தாங்கி, இதுவரை யாரும் சொல்லாத விஷயத்தை சொல்ல வருகிறார் புதுமுக இயக்குநர் தனசேகர். படத்தில் கஞ்சா கருப்புக்கு ஜோடியாக காவேரி என்பவர் நடிக்கிறார். சென்னை, ராமேஸ்வரம், பாண்டிச்சேரி போன்ற கடல்சார்ந்த இடங்களை தேர்ந்தெடுத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். படத்தின் சிறப்பு அம்சமாக வெளிநாட்டுக்காரர்களையும் நடிக்க வைத்துள்ளனர். இதற்காக ஜெர்மன் மாடல் சந்திரா ராமு, அமெரிக்காவை சேர்ந்த அமி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜெஸி ஆட்ஸ் போலன் உள்ளிட்டவர்களையும் கஞ்சா கருப்போடு சேர்ந்து மன்னார் வளைகுடா படத்தில் நடிக்க வைத்துள்ளார் டைரக்டர். படத்தின் காட்சி அமைப்பு, அதற்காக அவர்கள் எந்தமாதிரி நடிக்க வேண்டும் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர் படக்குழுவினர்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Hunter - trichy/manama,இந்தியா
05 ஜன, 2012 - 21:23 Report Abuse
 Hunter நல்லவர்களுக்கு நல்லதே Nadakkum
Rate this:
கவிகுமார் - London,யுனைடெட் கிங்டம்
05 ஜன, 2012 - 15:11 Report Abuse
 கவிகுமார் மிக சிறந்த நடிகராக கஞ்சா கருப்பு வர வாழ்த்துக்கள்.
Rate this:
m.govindapandian - usilampatti,இந்தியா
05 ஜன, 2012 - 08:25 Report Abuse
 m.govindapandian very good
Rate this:
Balamurali - Salem  ( Posted via: Dinamalar Android App )
04 ஜன, 2012 - 19:31 Report Abuse
Balamurali கஞ்சா கருப்பு அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in