தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே இருவரும் சமீபத்தில் ஹாலிவுட் படத்தில் நடித்தனர். பிரியங்கா, பேவாட்ச் படத்திலும், தீபிகா, டிரிபிள் எக்ஸ் படத்திலும் நடித்தார். இதில் தீபிகா படம் தான் வெற்றி பெற்றது. ஆகையால் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார் தீபிகா. பிரியங்கா படம் வெற்றி பெறவிட்டாலும் அவரும் அடுத்தடுத்து ஏ கிட் லைக் ஜேக் மற்றும் ஐஸ்நாட் இட் ரொமான்ட்டிக் படங்களில் கமிட்டானார். இந்த இரண்டு படங்களிலும் பிரியங்கா லீடு ரோலில் நடிப்பார் என்று பார்த்தால் கெஸ்ட் ரோலில் தான் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து பிரியங்கா கூறியிருப்பதாவது... "நான் நடிக்க உள்ள ஹாலிவுட் படங்களில் சிறப்பு தோற்றத்தில் தான் நடிக்கிறேன். ஆகையால் இது முழுக்க பிரியங்கா படம் என்று எண்ணிவிட வேண்டாம். நான் சிறு வேடத்தில் தான் நடிக்கிறேன், ஆனால் ஒரு அருமையான கதையம்சம் உள்ள படம். இந்த படங்களில் நானும் நடிப்பது மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.