ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'தசாவதாரம்' படத்தில கமல்ஹாசன் ஏற்று நடித்த கதாபாத்திரத்திங்களில் ஒன்று... பல்ராம் நாயுடு. ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டைப்பெற்ற இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து 'சபாஷ் நாயுடு' என்ற படத்தை தொடங்கினார் கமல்.
இந்தப்படத்தில் முதல் முறையாக ஸ்ருதிஹாசன் கமல்ஹாசனுடன் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன் உட்பட பலரும் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் கமல்ஹாசனின் கால் உடைந்ததால், தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதனால் சுமார் 7 மாதங்கள் படப்பிடிப்பு எதிலும் பங்கேற்க முடியாமல் ஓய்வில் இருந்த கமல்ஹாசன் பின்னர் 2016 டிசம்பர் மாதம் படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டிருந்தார்.
அமெரிக்காவில் இருக்கும் கமலின் விசேஷ ஒப்பனைக்கான கலைஞர்களுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் அப்போது படப்பிடிப்பு நடக்கவில்லை. அதன் பிறகும், பல்வேறு காரணங்களால் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு தள்ளிப்போனது.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார் கமல். எனவே 'சபாஷ் நாயுடு' ட்ராப் செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் உலா வந்தன.
இந்நிலையில், 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும், படம் ட்ராப் பண்ணப்படவில்லை என்றும் கமல்ஹாசன் தரப்பில் சொல்லப்படுகிறது.