ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
திரையுலகத்தில் எந்த நடிகைக்கு வரவேற்பு இருக்கிறது என்பதை அவர்களைத் தொடரும் டுவிட்டர் தொடர்பாளர்களை வைத்தும் தெரிந்து கொள்ளலாம். இந்தக் காலத்தில் நடிகர், நடிகைகள் எதைப் பெரிதாக நினைக்கிறார்களோ இல்லையோ டுவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் தங்களை எவ்வளவு பேர் தொடர்கிறார்கள் என்பதைத்தான் பார்க்கிறார்கள். அது மட்டுமா அவர்கள் பதிவிடுவதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள், எத்தனை பேர் ரிடுவீட் செய்கிறார்கள் என்ற கணக்கையும் ஆவலுடன் கவனிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிக்கும் பொதுவான நடிகைகள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் அவர்களைத் தொடர்பவர்களையும் இரு மொழிக்கானவர்களாகவும் சேர்த்துக் கொள்ளலாம். இப்போதுள்ள நடிகைகளைப் பொறுத்தவரையில் டுவிட்டர் தொடர்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஹன்சிகா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன் 53 லட்சம் தொடர்பாளர்களுடன் முதலிடத்திலும், சமந்தா 40 லட்சம் தொடர்பாளர்களுடன் இரண்டாவது இடத்திலும், த்ரிஷா 36 லட்சம் தொடர்பாளர்களுடன் மூன்றாவது இடத்திலும் ஹன்சிகா 30 லட்சத்துடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.
ஆனாலும், ஹன்சிகா தமிழில் தற்போது பிரபுதேவா ஜோடியாக ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.