Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விடுமுறை நாளிலும் தியேட்டர்களுக்கு வராத மக்கள்

17 ஜூலை, 2017 - 18:09 IST
எழுத்தின் அளவு:
People-not-interested-to-see-movies-in-theatres

ஜிஎஸ்டி வரி விதிப்பால் தியேட்டர்களில் டிக்கெட் விலை உயர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், மக்கள் தியேட்டர் விலை உயர்வை பெரிதாகவே எடுத்துக் கொண்டுள்ளார்கள் எனத் தெரிகிறது. கடந்த இரண்டு வாரங்களாகவே விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தியேட்டர்களுக்கு மக்கள் வருவது வெகுவாக் குறைந்துவிட்டதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக, புதிய படங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பல காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருக்கும். ஆனால், இரண்டு வாரங்களாக ஓரிரு தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் மட்டுமே அரங்கு நிறைந்துள்ளன. மற்ற தியேட்டர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான மக்களே வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். மல்டிபிளக்ஸ்களில் தான் இப்படி என்றால் வெளியூர்களில் நிலைமை இன்னும் மோசமாம். வெள்ளிக் கிழமை வெளிவந்த புதுப் படங்களைப் பார்க்க பல தியேட்டர்களில் 10 பேர் கூட வரவில்லையாம்.

இன்னும் கேளிக்கை வரி விவகாரம் பேச்சு வார்த்தை அளவில் தான் உள்ளது. அது வருமா, வராதா என்பது பேச்சு வார்த்தை முடிந்த பின்னர்தான் தெரியும். தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் உள்ள அபிராமி தியேட்டர் இணையதள முன்பதிவுக் கட்டணத்தை ரத்து செய்துவிட்டது. அதன் மூலம் இனி 30 ரூபாய் மிச்சமாகும். இது போல மற்ற தியேட்டர்களும் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதை விட பார்க்கிங் கட்டணம், தின்பண்டங்கள் விலை குறைக்கப்பட வேண்டும் என்பது அவர்களது முக்கி டார்கெட் ஆக உள்ளது.

நிலைமை இப்படியே போனால் தமிழ்நாட்டில் இந்த வருடம் பல தியேட்டர்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என்கிறார்கள்.

Advertisement
ஒரே நேரத்தில் 3 மொழிகளில் வெளியாகும் வில்லன்..!ஒரே நேரத்தில் 3 மொழிகளில் வெளியாகும் ... எந்தன் நெங்சில் நீங்காத "வாலி" : மூன்றாம் ஆண்டு நினைவு நாள் எந்தன் நெங்சில் நீங்காத "வாலி" : ...


வாசகர் கருத்து (73)

ravichandran - Hosur,இந்தியா
18 ஜூலை, 2017 - 13:37 Report Abuse
ravichandran இது GSTயால் ஏற்பட்ட பாதிப்பு இல்லை இவர்களின் பேராசையால் வந்த பாதிப்பு, பேராசை பெருநஷ்டம்
Rate this:
shankar - chennai,இந்தியா
18 ஜூலை, 2017 - 13:29 Report Abuse
shankar After rajini Vijay is the last super star idhoda cinema close andre K balachandar sonaru
Rate this:
mupaco - Madurai,இந்தியா
18 ஜூலை, 2017 - 12:42 Report Abuse
mupaco முத்து படம் 30 ரூபாய் தான். எப்படி ஓடுச்சு? அப்புறம் தியேட்டர் தொழிலாளி அப்ப வாங்குன சம்பளத்துல இப்ப எவ்வளவு கூட இருக்கு? கட்டணத்தை கூட்டறதுக்கு? ரசனை அப்படி சொல்லி நடிகரை, இயக்குனரை தூக்கி விட்டு நம்மளையும் செலவழிக்க வைத்தால் என்ன செய்வது?
Rate this:
Arumugam - Paris,பிரான்ஸ்
18 ஜூலை, 2017 - 12:29 Report Abuse
Arumugam கூத்தாடிகள் ஒரு சிலர் கோடி கணக்கில் சம்பாதிப்பதும், பலர் வறுமையில் வாடுவதுமான இந்த சினிமாத்தொழிலை முழுவதுமாக மூடிவிட்டால், சமூகம் உருப்படும். இவர்களும் வேறு வேலை தேடிக்கொள்வார்கள். சினிமா பார்க்க ஆர்வமுள்ளவர்களுக்கு ஆயிரக்கணக்கில் பழையப்படங்கள் இருக்கின்றனவே.
Rate this:
Sivagiri - chennai,இந்தியா
18 ஜூலை, 2017 - 12:17 Report Abuse
Sivagiri சினிமாவுக்கு என்று தனி பக்கங்களை போடுவதை பத்திரிகைகள் நிறுத்த வேண்டும். தனி இணையதள பக்கங்களையும் நிறுத்த வேண்டும்.
Rate this:
மேலும் 68 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film GajiniKanth
  • கஜினிகாந்த்
  • நடிகர் : ஆர்யா
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
  Tamil New Film Junga
  • ஜூங்கா
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :கோகுல்
  Tamil New Film Tea Kadai Bench
  • டீ கடை பெஞ்ச்
  • நடிகர் : ராமகிருஷ்ணன்
  • நடிகை : தருஷி
  • இயக்குனர் :ராம் சேவா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in