ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
புனே: இந்து சர்க்கார் என்ற இந்தி படத்திற்கு எதிராக காங்கிரசார் போர்க்கொடி தூக்கி உள்ளனர். எனவே, திட்டமிட்டபடி, ஜூலை, 28 ம் தேதி இந்த படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவசர நிலை குறித்த படம்
பிரபல இயக்குனர் மதூர் பந்தார்கர் எடுத்து வரும், இந்து சர்க்கார் என்ற ஹிந்தி திரைப்படம், கடந்த 1975 ம் ஆண்டு முதல், 1977 ம் ஆண்டு வரை, நாட்டில் அவசர நிலை அமலில் இருந்த போது நடந்த நிகழ்வுகளை அடிப்டையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், மறைந்த பிரதமர் இந்திரா, அவரது மகன் சஞ்சய் ஆகியோர் பற்றி தகவல்கள் இடம் பெறுவது காங்கிரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை காங்., தலைவர் சஞ்சய் நிருபம், இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு முன், தங்களுக்கு போட்டு காட்ட வேண்டும் என தணிக்கை வாரியத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு, படத்தில் 12 இடங்களில் மாற்றம் செய்ய வேண்டும், இரண்டு விளக்க குறிப்புகளை வெளியிட வேண்டும் என கூறியிருந்தது. மேலும், ஆர்.எஸ்.எஸ்., அகாலி போன்ற வார்த்தைகளை நீக்கும்படியும் கூறப்பட்டது. இந்த படம், ஜூலை, 28 ம் தேதி ரிலீசாக உள்ளது.
நிகழ்ச்சி ரத்து
இந்த படத்தின் விளம்பரம்படுத்தும் நிகழ்ச்சி, கடந்த சனிக்கிழமை, மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் நடக்க இருந்தது. ஆனால், படக்குழுவினர் தங்கி இருந்த ஓட்டல் முன் உள்ளூர் காங்கிரசார் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், படகுழுவினர் ஓட்டலை விட்டு வெளியே வர முடியாமல் நிகழ்ச்சியை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டது. இச்சூழ்நிலையில் திட்டமிட்டபடி இந்த படம் ரிலீசாகுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.