ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது தனது அடுத்த படத்திற்கான பீரி-புரொடக்சன்ஸ் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது.
இந்நிலையில், சென்னையிலுள்ள டிரேட் சென்டரில் சினிமா சம்பந்தப்பட்ட ஒரு கண்காட்சியை வருகிற வெள்ளிக்கிழமை அன்று நடத்துகிறார் எஸ்.பி.ஜனநாதன். இந்த கண்காட்சியில் சினிமா குறித்த பல அறிய தகவல்கள் இடம்பெறப்போகிறதாம்.
முக்கியமாக இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் தேர்வு செய்து, அந்தந்த பாடல்களுக்கேற்ற படங்களை சில ஓவியர்கள் வரைந்துள்ளார்களாம். அவை அனைத்துமே இந்த கண்காட்சியில் இடம்பெற இருக்கிறது. மேலும், அந்த ஓவியங்களை பார்த்தாலே எந்த அது பாடலுக்குரியது என்பதை சொல்லி விட முடியுமாம். அந்த அளவுக்கு தத்ரூபமாக வரைந்துள்ளார்களாம்.