Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தொடரும் அமைச்சர்களின் கோபம்... ஆதரவு தெரிவித்த ஸ்டாலின், நன்றி தெரிவித்த கமல்

17 ஜூலை, 2017 - 10:16 IST
எழுத்தின் அளவு:
Kamal-thanks-to-Stalin

நடிகர் கமலை மிரட்டிய அமைச்சர்களுக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தனக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஸ்டாலினுக்கு, கமல் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அரசு மீது, சமீபத்தில், நடிகர் கமல் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். குற்றச் சாட்டுக்கு ஆதாரம் இருக்கிறதா... ஆதாரம் இல்லாமல் கமல் பேசக் கூடாது. அவர் மீது அவதுாறு வழக்கு தொடர்வோம் என, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நேற்று முன்தினம் கூறினார்.

அதுபோல, கமல் ஒரு ஆளே கிடையாது என, அமைச்சர் அன்பழகனும், கமல் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, அமைச்சர் சி.வி.சண்முகமும் தெரிவித்தனர். தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கமலுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் கூறியதாவது: மக்கள் கருத்தை பிரதிபலித்த கமலை, சட்டத்தை காட்டி அமைச்சர்கள் மிரட்டுகின்றனர். ஆட்சியாளர்கள் தங்கள் மீதான விமர்சனங்களில் உள்ள உண்மை களை தெரிந்து, தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்; அது தான் ஜனநாயக ஆட்சி.

கமல் மீது வன்மம் கொண்டு கருத்துதெரிவித்து, விமர்சிப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். கமலின் கருத்து, தமிழக மக்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உடனே, கமல் தன், டுவிட்டர் பக்கத்தில், "அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவருக்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோப செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர், தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது, என தெரிவித்துள்ளார்.

Advertisement
ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை : சர்ச்சைக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் நான் ... என் பெயரை களங்கப்படுத்துகிறார்கள்: முமைத்கான் கோபம் என் பெயரை களங்கப்படுத்துகிறார்கள்: ...


வாசகர் கருத்து (32)

Ramesh - Sydney,ஆஸ்திரேலியா
18 ஜூலை, 2017 - 04:44 Report Abuse
Ramesh இப்படியே கமலை விமரிசித்து தமிழ்நாடு பப்ளிக் கழிவறை மாறிவிட்டது.
Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
17 ஜூலை, 2017 - 18:06 Report Abuse
Rajamani Ksheeravarneswaran கமலுக்கு தமிழ் கற்று கொடுத்தவர் கருணாநிதி . தெய்வ புலவர் அருளிய திருக்குறளில் காமத்துப்பாலை அதிகளவில் கருணாவும் ,கமலும் படித்தது மட்டுமன்றி அதில் வல்லவர்கள். ஸ்டாலினும் கமலும் இதற்கு சளைத்தவர்களா ? மொத்தத்தில் ஊழல் எனக்கு நெருப்பு என்று கருணாவும் ஸ்டாலினும் நினைப்பது போல் கமலும் இப்போது நினைக்கிறார். திமுக ஆட்சியில் இவர் ஊழல் பற்றி பேசியிருந்தால் ...அய்யகோ .............
Rate this:
Shanu - Mumbai,இந்தியா
17 ஜூலை, 2017 - 18:01 Report Abuse
Shanu சினிமாத்துறையில் உள்ள கருப்பு பணத்தை இந்த கமலால் பேச முடியுமா? கோடிக்கணக்கில் நடிகர்கள் சம்பாதிக்கிறார்கள். ஆனால் திரைக்கு பின்புறம் வேலை செய்பவர்கள் படும் கஷ்டங்களை என்றைக்காவது கமல் பேசி இருக்கிறாரா?? நம் நாடு முழுவதும் லஞ்சம் அதிகாரத்துவம் உள்ளது. கமல் சசிகலா பத்தி விமர்சனம் செய்ய முடியுமா?? சசிகலா கும்பலுக்கு எதிராக பேசினால் , அவரை கொன்று விடுவார்கள் என்று அவருக்கு தெரியும். பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு கேவலமான நிகழ்ச்சி. கமலுக்கு படங்கள் எதுவும் கையில் இல்லை என்பதற்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் சமுதாயத்தை சீரழிக்கிறார். நாட்டின் மீது, நாட்டு மக்கள் மீது அக்கறை உள்ளபவராக இருந்தால், கமல் இது போல் நிகழ்ச்சியை நடத்த கூடாது.
Rate this:
Prasanna - Chennai,இந்தியா
17 ஜூலை, 2017 - 18:00 Report Abuse
Prasanna As a citizen of this nation, everyone has the right to question. Freedom of speech should be respected. However, Kamal's stand against the government is applicable only when ADMK is in the ruling side. 1) The basic commodity prices have multi folded in TN post 2007. Price of Rice and Dhal has reached the sky. DMK was in power from 2006 - 2011. Why Kamal has not raised his voice against the government? Is it because, the ruling party was DMK? 2) Hope, everyone still remembers the Himalayan 2G scam. Supreme court has convicted Mr. A.Raja in this case, who is again a DMK M.P. So, Why Kamal has not shown up ?? Instead, he chose to stay silent in this matter? 3) The involvement of Maran brothers in BSNL case.. Why "No comments" Mr.Kamal ?? I doubt does Kamal have any personal aga in this matter. Is DMK using Mr.Kamal or it is the other way round? If Mr.Kamal wishes to stay close to politics, he should also ensure that he disintegrates himself from a particular party. நீங்களும் சாதாரன மனுஷனா மாறிட்டிங்களே Kamal sir...
Rate this:
rsudarsan lic - mumbai,இந்தியா
17 ஜூலை, 2017 - 17:09 Report Abuse
rsudarsan lic ஒரு பக்கம் இவர்கள் ஸ்டாலின் கமல் சன் டிவி Vijay டிவி என்று சுத்தமான தமிழ்ப் பெயர்கள் வைத்து kolvaargal. அத்தனைக்கும் மேலாக பிக் பாஸ் என்று அப்படியே copyright சொற்படி பெயர் vaippargal. நாமெல்லாம் இளிச்ச வாயர்கள் இவர்களை எந்த கேள்வியும் கேட்க koodaadhu. பணம் தேடும் பிணைக்கைதி ஆகி விட்டார் கமல்
Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Traffic Ramasamy
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in