Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இறுதிகட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்

16 ஜூலை, 2017 - 15:02 IST
எழுத்தின் அளவு:
Bhaskar-oru-rascal-shooting-comes-to-conclusion

2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல். மம்முட்டி, நயன்தாரா நடித்திருந்தார்கள். சித்திக் இயக்கி இருந்தார். இந்தப் படம் தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகி வருகிறது. மலையாளத்தில் இயக்கிய சித்திக்கே தமிழிலும் இயக்குகிறார். சித்திக் ஏற்கெனவே தமிழில் ப்ரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன் ஆகிய படங்களை இயக்கியவர் அனைத்துமே வெற்றிப் படங்கள்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் மம்முட்டி நடித்த கேரக்டரில் அரவிந்சாமியும், நயன்தாரா நடித்த கேரக்டரில் அமலாபாலும் நடித்து வருகிறார்கள் இவர்கள் தவிர நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, உள்பட பலர் நடிக்கிறார்கள். தெறி படத்தில் அறிமுகமான நடிகை மீனாவின் மகள் நைனிகா அரவிந்த் சாமி, அமலா பால் மகளாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் ஆஃப்தாப்ஷிவ்தசானி வில்லனாக நடிக்கிறார்.


இந்தப் படத்தின் தமிழ் வசனங்களை ரமேஷ் கண்ணா எழுதுகிறார். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரேஷ் இசை அமைக்கிறார். பல்வேறு கட்டங்களாக சென்னை, கொல்கத்தா, கொச்சியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.


Advertisement
இசை நடிக்கும் ஆல்பத்தில் இனியாஇசை நடிக்கும் ஆல்பத்தில் இனியா ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை : சர்ச்சைக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் நான் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film sketch
    • ஸ்கெட்ச்
    • நடிகர் : விக்ரம்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :விஜயசந்தர்
    Tamil New Film Karuppan
    • கருப்பன்
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
    • இயக்குனர் :பன்னீர்செல்வம்
    Tamil New Film Theeran Adhigaram Ondru
    Tamil New Film Nadodi Kanavu
    • நாடோடி கனவு
    • நடிகர் : மகேந்திரன்
    • நடிகை : சுப்ரஜா
    • இயக்குனர் :வீரசெல்வா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in