ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
வாகை சூடவா படத்திற்காக சிறந்த நடிகையாக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் இனியா. சின்ன சின்ன படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்த இனியா வாகை சூடவா படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். அதன் பிறகு மவுனகுரு, அம்மாவின் கைபேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், மாசாணி உள்பட பல படங்களில் நடித்தார். தமிழில் வாய்ப்பு குறைந்தாலும் மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் மியா என்ற இசை ஆல்பத்தில் ஆட்டம் போட்டுள்ளார் இனியா. இது ஒரு சமூக விழிப்புணர்வு பாடல் ஆல்பம். மகேஷ் இயக்கி உள்ளார், அபிரெஜி, லாவெல், ஜெயன் இசை அமைத்துள்ளனர், அருண் நந்தகுமார் நடனம் அமைத்துள்ளார், விரைவில் இந்த ஆல்பம் வெளிவருகிறது.