மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
காமெடி நடிகர்கள் கஞ்சா கருப்பு, யோகி பாபு, பவர் ஸ்டார் சீனிவாசன் மூவரும் ஒரே படத்தில் ஹீரோக்களாக நடிக்கிறார்கள் படத்தின் பெயர் நான் யார் தெரியுமா?. ரோஷன், அர்ஷிதா, சத்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். ரஷாந்த் இசை அமைக்கிறார், சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி இயக்குனர் நவீன்ராஜ் கூறியதாவது:
"காவல் துறை அதிகாரிகளாக வேண்டும் என்ற லட்சியத்தோடு சென்னை வரும் மூவர் வாழ்விலும் ஒரு பெண் பேய் குறுக்கிடுகிறது அந்த பேய் இவர்களை போலீஸ் அதிகாரிகளாக்க மூன்று நிபந்தனைகளை போடுகிறது. நிபந்தனைகளை சவாலாக ஏற்றுக்கொண்டு போராடும் அவர்களின் அவஸ்தைகளை நகைச்சுவையுடன் சொல்லும் படம். கஞ்சா கருப்பு, பவர் ஸ்டார், யோகி பாபு ஆகிய மூவரும்தான் ஹீரோக்கள், மூவருக்குமே சம வாய்ப்பு படத்தில் இருக்கிறது. 100 சதவிகித காமெடி படம்" என்கிறார் நவீன்ராஜ்.