பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
திரைப்படத்தின் பாடல்கள் காட்சிகள், படத்தின் காட்சிகள் மற்றும் டிரைலர்களை கேபிள் டி.விக்களில் ஒளிபரப்ப இனி தாலுவா வாரியாக உரிமம் வழங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சங்கம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கேபிள் டி.வி. உரிமையாளர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் தமிழ் திரைப்பட பாடல்கள், படக் காட்சிகள், பூஜைகள், டீசர்கள், டிரைய்லர்கள், மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒளிபரப்பிக் கொள்ள எந்தவொரு கேபிள் உரிமையாளருக்கோ, தனிப்பட்ட நபருக்கோ, தனிப்பட்ட அமைப்புகளுக்கோ, எந்த உரிமையும், உரிமமும் கொடுக்கப்படவில்லை.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள தாலுகா வாரியாக 222 தாலுகாக்களுக்கும் தனித்தனியாக உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உரிமம் வேண்டுவோர் தாலுகா வாரியாக சங்கத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம். சங்கத்திடம் உரிமம் பெறாமல் ஒளிபரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.