'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
அஜீத் நடித்துள்ள படம் விவேகம். அஜீத் ரசிகர்களுக்கிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படம் ஹாலிவுட் தொழில் நுட்பத்தில் உருவாகியிருப்பதாக சொல்கிறார்கள். முக்கியமாக, இதற்கு முன்பு அஜீத்தை வைத்து தான் இயக்கிய வீரம், வேதாளம் படங்களை விட இந்த படம் தனக்கு முக்கியமான படமாக இருக்கும் என்பது சிறுத்தை சிவாவின் நம்பிக்கையாக இருக்கிறது.
அதோடு, தற்போது இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், விவேகம் படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை பார்த்த அஜீத், தனது திருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதனால் அடுத்தகட்ட பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டு வருகிறார் சிவா.
மேலும், இந்த படத்தில் நாயகியாக காஜல்அகர்வால் நடித்துள்ளார். கதைப்படி அஜீத்தின் மனைவியாக அவர் நடித்திருக்கிறார். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் அக்சராஹாசன் நடித்துள்ளார். இவருக்கு, காஜல்அகர்வாலுடன் குறைவான காட்சிகளே உள்ளதாம். அதனால் அவர்கள் இருவரும் ஸ்பாட்டில் இருந்த நாட்கள் ரொம்ப குறைவாம். அதோடு, இதற்கு முன்பு அவர்களுக்கிடையே நட்பு இல்லாததால், படப்பிடிப்பில் ஹாய் சொல்வதோடு நிறுத்திக் கொண்டார்களாம். கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்து விடை பெற்றபோது, ஒரு செல்பி எடுத்துக்கொண்டு பை சொல்லிவிட்டு அவர்கள் விடைபெற்று விட்டதாக சொல்கிறார்கள்.