ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் பிரேமம், காளி படங்களில் நடித்தவர் சாய் பல்லவி. தற்போது பிதா, கரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் பிதா படத்தில் வருண்தேஜ்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படம் ஜூலை 21-ந்தேதி ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதையடுத்து, ஏ.எல்.விஜய் இயக்கும் கரு படத்திலும் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது.
இந்நிலையில், தற்போது நானிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் சாய் பல்லவி. சமீபத்தில் தெலுங்கில் நானி நடித்த நின்னுகோரி படம் வெளியானது. அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்து மில்லியன் டாலர் கிளப் பில் சேர்ந்துள்ளது. அதனால் செம உற்சாகத்தில இருக்கும் நானி, அடுத்து தான் எம்.சி.ஏ., கிருஷ்ணர்ஜூனா யுத்தம் என்ற இரண்டு படங்களில் நடிக்கயிருப்பதாக அறிவித்திருக்கிறார். இதில் ஸ்ரீராம் வேணு இயக்கும் கிருஷ்ணர்ஜூனா யுத்தம் படத்தில் நானிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்தில் நானி இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம்.