வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மெரீனா எழுச்சியின்போது அடிக்கடி அடிபட்ட பெயர் ராகவா லாரன்ஸ். பின்னர் அரசியல் ரீதியிலான அவரது பேச்சுகள் எல்லாம் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. மேலும் தான் நடித்து வந்த படங்களின் பப்ளிசிட்டிக்காவே இப்படி எல்லாம் செய்கிறார் போடுகிறார் என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாரன்ஸ் மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார். சாரதி இயக்கத்தில் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் படம் 'காவியன்'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் தெலுங்கில் 'வாடு ஒஸ்தாடு' என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ்.