'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபுசாலமன் இயக்கும் படங்கள் என்றாலே இமான்தான் இசையமைப்பாளர். வெற்றிக் கூட்டணியான இவர்களுக்குள் தற்போது பிரிவு ஏற்பட்டுள்ளது. தொடரி தோல்விக்குப் பிறகு பிரபுசாலமனுக்கு இறங்குமுகமாகிவிட்டது. எனவே கும்கி-2 படத்தை தயாரித்து இயக்க உள்ளார்.
முற்றிலும் புதுமுகங்களை வைத்து 'கும்கி-2' படத்தை இயக்கவிருக்கிறார் பிரபு சாலமன். படத்தின் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த சிக்கன நடவடிக்கையின் ஒரு அங்கமாக, தனது ஆஸ்தான இசை அமைப்பாளரான டி.இமானை தவிர்த்துவிட்டு, இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னாவை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார் பிரபு சாலமன்!
'தெகிடி', 'சேதுபதி' விரைவில் வெளியாகவிருக்கும் 'கூட்டத்தில் ஒருத்தன்' முதலான படங்களுக்கு இசை அமைத்தவர் நிவாஸ் கே.பிரசன்னா. இரண்டு படங்களிலும் நல்ல பாடல்களை கொடுத்து இன்னும் பெரிய அளவில் பேசப்படாமல் இருக்கும் இவர், பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'கும்கி-2' படம் தனக்கு முகவரியைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்தப் படத்துக்கு இசை அமைக்கவிருக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா.
'கும்கி-2' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது.