வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
அனுராக் பாசு இயக்கத்தில், ரன்பீர், கத்ரீனா கைப் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஜகா ஜசூஸ். இப்படத்தில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்திருப்பதோடு, தயாரிப்பாளராகவும் உள்ளார். ஜகா ஜசூஸிற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முன்னதாக இப்படத்தின் புரொமோஷன்களில் பங்கேற்ற ரன்பீர், ஒருவேளை ஜகா ஜசூஸ் படம் தோல்வியடைந்தால் நஷ்ட ஈடு தருவதாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ரன்பீர் மேலும் கூறியிருப்பதாவது... "படத்தின் தோல்விக்கு நஷ்ட ஈடு என்பது 1950-களில் என் தாத்தா காலத்திலிருந்தே கொடுக்கப்பட்டு வந்துள்ளது. மேரா நாம் ஜோக்கர் படம் தோல்வியடைந்தபோது என் தாத்தா ராஜ்கபூர், பாபி படம் ரிலீஸான சமயத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரிய ஷேர் தந்தார். ஓருவேளை என் படமும் தோல்வியடைந்தால் நானும் நஷ்டப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப தருவேன்" என்றார்.
சமீபத்தில் நடிகர் சல்மான் தனது டியூப்லைடன் படத்தின் நஷ்டத்திற்கு பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.