பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் ராகங்களை தழுவித்தான் பாடல்களுக்கு இசையமைத்து வந்தனர். ஆனால் பின்னர் தமிழ்த்திரையிசை பாடல்களில் மேற்கத்திய கலாச்சாரம் பரவியதைத் தொடர்ந்து கர்நாடக இசையில் உருவான பாடல்களை கேட்பதே அரிதாக உள்ளது. சமீபகால இசையமைப்பாளர்கள் ராகங்களை தழுவி பாடல்கள் கம்போஸ் செய்வதில்லை.
அதேபோல், அனிருத்தும் மேற்கத்திய பாணியில்தான் இசையமைத்து வருகிறார். என்றாலும், அஜித்தின் விவேகம் படத்திற்கு கர்நாடக இசையில் ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார். இதுவரை விவேகம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்வைவா, தலை விடுதலை என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்ட நிலையில், அடுத்தபடியாக கர்நாடக இசையில் தயாராகியுள்ள மூன்றாவது பாடலையும் விரைவில் வெளியிடப்போகிறார்களாம். முக்கியமாக, அந்த பாடல்தான் அஜித்துக்கு மிக பிடித்தமான பாடல் என்றும் விவேகம் யூனிட்டில் பேசிக்கொள்கிறார்கள்.