அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். இதில், ஒரு வேடத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் நடிக்கிறார். அதை அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் உறுதிப்படுத்தினர். அதையடுத்து ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை என்று தொடர்ந்து முழக்கமிட்டு வரும் தமிழக இளைஞர்கள், விஜய்யின் மெர்சலுக்கு ஏகபோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரேணிகுண்டா இயக்குநர் ஆர்.பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் கருப்பன். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது. அதில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் பாய்ந்து செல்லும் ஒரு காளையை விஜய்சேதுபதி அடக்குவது போன்று இடம்பெற்றுள்ளது. ஆக, விஜய்சேதுபதியும் ஜல்லிக்கட்டு வீரராக நடிப்பதை கருப்பன் மோஷன் போஸ்டர் உறுதிப்படுத்துகிறது.
விஜய், விஜய்சேதுபதி போலவே நடிகர் ஆர்யாவும் சந்தனதேவன் என்ற படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.