Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் பார்க்க நேரமில்லை: ஸ்ருதிஹாசன்

14 ஜூலை, 2017 - 00:04 IST
எழுத்தின் அளவு:
No-time-to-watch-Bigboss-says-Shrutihassan

பெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும், சங்கமித்ரா படத்தில் இருந்து, ஸ்ருதி விலகலா அல்லது விலக்கலா என, 100 மில்லியன் கேள்விகள் இருந்தாலும், அந்த சுவடே இல்லாமல், எப்போதும் போல், சுறுசுறுப்பாகவே வலம் வருகிறார், ஸ்ருதி. குடும்ப விஷயம், நடிக்கும் படங்கள், சமூக நலன் ஆகியவை குறித்த கேள்விகளுக்கு, பதற்றமின்றி பதில் வருகிறது, ஸ்ருதியிடமிருந்து; அவருடன் ஒரு சந்திப்பு:

உங்களின் தற்போதைய படங்களை பற்றி?


ஒரு ஹிந்தி படம் முடியும் நிலையில் உள்ளது. என் திரையுலக வாழ்க்கையில், இந்த படம் ஒரு மைல்கல்லாக இருக்கும். அடுத்ததாக, சபாஷ் நாயுடு படம். இந்த படத்தில், இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கு அடுத்து, என்ன படத்தில் நடிப்பது என்பதை, இனிமேல் தான் யோசிக்க வேண்டும்.


கொஞ்சம் இடைவெளி விழுந்தது போல் தெரிகிறதே?


கடந்த ஏழு ஆண்டுகளாக, ஒரே நேரத்தில், நான்கு அல்லது ஐந்து படங்கள் வரை நடித்தேன். ஆனால், இப்போது அப்படி யில்லை. எனக்கு பிடித்த கதைகளில் மட்டுமே, நடிக்க முடிவு செய்திருக்கிறேன். நல்ல படங்களுக்காக காத்திருப்பது தவறில்லையே?


அப்பாவுடன் நடித்த அனுபவம்?


சபாஷ் நாயுடு படத்தில், அவருக்கு மகளாகவே நடிக்கிறேன். தைரியமான பெண்ணாக இதில் நடிக்கிறேன். படப்பிடிப்பின் போது, என் வேலையை நான் பார்ப்பேன். அப்பா, அவர் வேலையை பார்ப்பார். தங்கை அக் ஷரா, இதில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். அதனால், அவரது வேலையை, அவர் பார்ப்பார். யாரும், அடுத்தவர் வேலையில் தலையிட்டது இல்லை.


பெரிய பட்ஜெட் படங்களில் மட்டும் தான் நடிப்பீர்களா?


அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஹிந்தியில், பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என, எல்லா படங்களிலும் நடித்துள்ளேன். தமிழிலும், அது போல் நடிக்க ரெடி. ஆனால், சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்க, இதுவரை யாரும் என்னை அழைத்து இல்லை.


உங்கள் கவனம், இப்போது எதில் உள்ளது?


தொடர்ந்து, படங்களில் நடித்ததால், இசையை மூட்டை கட்டி வைத்து விட்டேன். தற்போது, திரும்பவும் அதில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தும் திட்டமும் இருக்கு.


மும்பையில் வசிக்கிறீர்களே; அங்கு பாதுகாப்பு எப்படி?


மும்பையில் உள்ள வீட்டில், தனியாகத் தான் தங்குகிறேன். முன்பு இருந்த வீட்டை விட, இப்போது தங்கியுள்ள வீட்டில், பாதுகாப்பு அதிகம். ஆனாலும், மும்பை போன்ற நகரங்களில், பெண்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.


ஸ்ருதியின் பலவீனம்?


எனக்கு ரொம்ப கோபம் வரும்; ஆனால், இப்போது அப்படி இல்லை. கோபத்தை குறைத்து விட்டேன்.


பொய் பேசுவது உண்டா?


எனக்கு பொய் சொல்வது, பிடிக்கவே பிடிக்காது. எந்த விஷயத்தையும் மறைத்து பேசத் தெரியாது. நான், பொய் பேசினால், என் முகமே காட்டிக் கொடுத்து விடும். அதே போல், மற்றவர்கள் பொய் பேசினாலும், எனக்கு பிடிக்காது.


அப்பா, அம்மா பற்றி?


இருவருமே திறமைசாலிகள். இருவரிடமும், தனித் திறமைகள் உள்ளன; போராடும் குணம் உடையவர்கள். அப்பா, எந்த விஷயத்தையும் கணிப்பதில் திறமைசாலி. அம்மாவை பொறுத்தவரை, அழகு தான், அவரது பலம். எப்போதும், புத்துணர்ச்சியுடன் இருப்பார்.


உங்கள் அப்பா நடத்தும், பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி...?


அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு, எனக்கு நேரம் இல்லை. ஆனால், என்னால், ஒரே இடத்தில் ரொம்ப நேரம் உட்கார முடியாது. ஒரே ஊரில், இரண்டு நாளைக்கு மேல் தங்கியிருக்க முடியாது.


கமல் அரசியலுக்கு வர வேண்டும் என, மக்கள் ஆசைப்படுகின்றனர் போலிருக்கிறதே?


அரசியலுக்கு வர மாட்டேன் என, அப்பா, எப்போதே உறுதியாக கூறி விட்டார். என்னிடமும், என் தங்கையிடமும், சமூக நலன் சார்ந்த விஷயங்களை பற்றி அவசியம் தெரிய வேண்டும் என, வலியுறுத்துவார். முறையாக வரி செலுத்த வேண்டும் என்பார். பிரிட்டனில் சில ஆண்டுகள் வசித்திருக்கிறேன். அங்கே, ஏதாவது பிரச்னை என்றால், பொதுமக்கள், தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக கூற முடியும். ஆனால், நம் நாட்டில் அப்படி யாரும் செய்வது இல்லை. அதுபோன்ற நிலை வந்தால் சமூகத்தில் மாற்றம் ஏற்படும். பொது விஷயங்களில் வெளிப்படையாக கருத்து கூறும் சிலரில், அப்பாவும் ஒருத்தர் என்பதில் பெருமை தான்.


எந்த விஷயத்தில் மாற்றம் வர வேண்டும் என, நினைக்கிறீங்க?


பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டியது மிகவும் அவசியம். சில குடும்பங்களில், பெற்றோர் வறுமையில் வாடுகின்றனர். அவர்களால், குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை எப்படி கட்ட முடியும்? எனவே, அவர்களுக்கு உதவுவதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். இப்போதெல்லாம், பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் நடக்கின்றன. அதையெல்லாம் கேட்கும் போது, இதயம் வலிக்கிறது. இது போன்ற விஷயங்களில் எல்லாம் மாற்றம் ஏற்பட வேண்டும்.

நடிகைகள், தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பது பற்றி?
நடிகர்களுக்கும் தான் உதவியாளர்கள் இருக்காங்க. எனக்கு மேக்-அப் மேன், உதவியாளர் உட்பட மூன்று பேர் உள்ளார்கள். உடைகள் மற்றும் மேக்-அப் விஷயங்களில் அவர்கள் தான் முக்கிய பங்கு எடுத்து கொள்வார்கள். அப்போது தான் திரையில் தோன்றும் போது நான் அழகாக தெரிய முடியும்.

தனுஷூடன் மீண்டும் நடிப்பீர்களா?

நல்ல கதை வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். தனுஷ் நல்ல திறமைசாலி


Advertisement
மலர் டீச்சர் வந்தாச்சு!மலர் டீச்சர் வந்தாச்சு! காயத்ரி ரகுராம் மீது போலீசில் புகார்: ‛பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தொடர் சிக்கல் காயத்ரி ரகுராம் மீது போலீசில் ...


வாசகர் கருத்து (6)

சேகர்,மறைமலைநகர் ஹலோ ராஜாராம் உங்க வீட்டுல முகம் பார்க்கும் கண்ணாடி இல்லையா? இல்லேன்னா சொல்லுங்க அனுப்பி வெக்கிறோம்.
Rate this:
N.Rajaram - Chennai,இந்தியா
14 ஜூலை, 2017 - 11:21 Report Abuse
N.Rajaram பார்க்க சகிக்காத ஒரு முகம் கேட்க சகிக்காத ஒரு குரல். இந்த அசிங்கங்கள் எல்லாம் பேட்டி வேறு கொடுக்கின்றன . அதையும் பிரசுரித்து தினமலர் தரம் தாழ்ந்து போகிறது.
Rate this:
V.K.Mohan - SIVAKASI,இந்தியா
14 ஜூலை, 2017 - 11:11 Report Abuse
V.K.Mohan அந்த கவர்ச்சி கூட்டத்தில் இவளையும் சேர்த்திருக்கலாம்.
Rate this:
Laser Eyes - Chennai,இந்தியா
14 ஜூலை, 2017 - 11:00 Report Abuse
Laser Eyes கால் சீட் கிடைக்காதவர்களும், வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு தான் இது ஒரு பொழுது போக்கு என்று சொல்கிறாரா????
Rate this:
Naduvar - Toronto,கனடா
14 ஜூலை, 2017 - 02:13 Report Abuse
Naduvar அட... பார்ரா படமே இல்லாம ஈ ஒட்டுறதா கேள்விப்பட்டேன் ? நீ வாயைத் திறந்து பேசினாலே எல்லாம் ஓடிடுவாங்க. இதுல இசை பயணம் ஒரு கேடா???
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in