தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 2015ல் மலையாளத்தில் மம்முட்டி நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. தற்போது இந்தப்படம் தமிழில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்கிற பெயரில் அரவிந்த்சாமி - அமலாபால் நடிப்பில் ரீமேக்காகிறது. மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய சித்திக் தான் தமிழிலும் இதை இயக்கி வருகிறார். தற்போது இந்தப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகரான அப்தாப் ஷிவ்தாசனி என்பவர் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தின் மலையாள ஒரிஜினலில் வில்லனாக, நயன்தாராவின் கணவராக நடித்தவர் நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி.. தமிழில் இந்த கேரக்டரில் அமலாபாலின் கணவராகத்தான் அப்தாப் நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தை ஒருமுறை பார்த்தாராம் அப்தாப். அதில் நடித்திருந்த சக்கரவர்த்தியின் நடிப்பு அப்தாப்பை கவர்ந்துவிட்டதாம். அதனால் தமிழில் அந்த கேரக்டரில் நடிக்க ஒகே சொன்னாராம் அப்தாப்.
சமீபத்தில் ராம்கோபால் வர்மாவின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றிருந்தபோது, வர்மாவின் ஆஸ்தான நடிகரான ஜே.டி.சக்கரவர்த்தியும் வந்திருந்தாராம்.. அவரிடம் அவரது கேரக்டரில், தமிழில் தான் நடிப்பதாக கூறியதற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தாராம் சக்கரவர்த்தி.. பாலிவுட்டை விட்டு வந்து தமிழில் நடிப்பது ஏதோ பாரின் படத்தில் நடிப்பதை போன்ற உணர்வை தருகிறதாம் அப்தாப் ஷிவ்தாசனிக்கு.