Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

காமெடி நடிகரின் வில்லன் வாய்ப்பை பறித்த திலீப்..!

13 ஜூலை, 2017 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Dileep-turn-as-villain-for-Kalabhavan-Shajon

மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டு விட்டார். அதுமட்டுமல்ல, அவர் சார்ந்திருந்த சங்கங்கள் அனைத்திலும் இருந்து நீக்கப்பட்டும் விட்டார். இப்போதுதான் திரையுலகை சேர்ந்தவர்கள் திலீப்பை பற்றிய தங்களது உண்மையான எண்ணவோட்டத்தை ஒவ்வொருவராக வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். அதேபோல திலீப்பின் பழிவாங்கும் குணத்தால் பாதிக்கப்பட்டவர்கள் விபரமும் இனி ஒவ்வொன்றாக வெளிவரும் என்றும் தெரிகிறது.

அப்படி திலீப்பால் பாதிக்கப்பட்டவர் தான் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் கலாபவன் சாஜன் என்கிற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. த்ரிஷயம் படத்தில் மோகன்லாலை சித்திரவதைப்படுத்தும் போலீஸ் கான்ஸ்டபிள் சகாதேவனாக நடித்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் தான் கலாபவன் சாஜன். அதற்கு முன்பு சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்து அவ்வளவாக பிரபலம் ஆகாமல் இருந்தார் சாஜன்.

ஆனால் 15 வருடங்களுக்கு முன்பே இவரை வில்லன் வேடம் தேடி வந்தது. ஆனால் அந்த வாய்ப்பு திலீப்பால் தான் தடுக்கப்பட்டு விட்டதாம். கடந்த 2002ல் திலீப் இரண்டு வேடங்களில் நடித்த படம் 'குஞ்சுக்கூனன்'. இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க கலாபவன் சாஜனை ஒப்பந்தம் செய்து ஸ்பாட்டில் அவருக்கு மேக்கப்பும் போட்டுவிட்டார்களாம். ஆனால், திலீப்போ ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் எப்படி வில்லனாக நடிக்க முடியும், காமெடிக்கு மட்டும் தான் லாயக்கு என அவரை நீக்க சொல்லிவிட்டாராம். அன்று கண்ணீருடன் செட்டை விட்டு வெளியேறினாராம் சாஜன்.

ஆனாலும் த்ரிஷயம் ஹிட்டை தொடர்ந்து 'மாயமோகினி', 'ரிங் மாஸ்டர்', 'வில்லாளி வீரன்' ஆகிய படங்களில் தன்னுடன் காமெடியனாக அவரை பயன்படுத்திக் கொண்டார் திலீப். இத்தனைக்கும் திலீப்பும் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in