Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிரிக்கெட் தேவை என்றால் பிக்பாஸூம் தேவை - கமல் விளக்கம்

12 ஜூலை, 2017 - 21:33 IST
எழுத்தின் அளவு:
Kamal-explain-about-Bigboss-controversy

சட்டம் என்னை காப்பாற்றும், நான் கைதாகும் சூழ்நிலை வந்தால் அதை சட்டப்படி சந்திப்பேன், கிரிக்கெட் தேவை என்றால் பிக்பாஸூம் தேவை என பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.

உலகம் முழுக்க பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்முறையாக தமிழகத்தில் விஜய் டிவியில் ஔிப்பரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பமான முதலே சமூகவலைதளங்களில் பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.


இந்நிலையில் இந்த நிகழ்ச்சி, சமூகத்திற்கு சீர்கேடானது, இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், கமல் உள்ளிட்ட போட்டியாளர்கள் 15 பேரையும் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார் பேட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த விளக்கம் வருமாறு...


சட்டம் என்னை பாதுகாக்கும்


என்னை கைது செய்ய வலியுறுத்தும் கூட்டத்திற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நான் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டால் அதை நான் தவிர்க்க மாட்டேன். சட்டப்படி சந்திப்பேன். சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அந்த சட்டம் என்னை பாதுகாக்கும்.


முத்தக்காட்சியை ஏன் எதிர்க்கவில்லை


பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் நடித்த போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அதில் கேட்டு போகாத கலாச்சாரம் இதில் கெட்டு போகிறதா. ஹிந்தி தெரியாததால் பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கு புரியாமல் இருக்கலாம்


என்னை நம்புவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்


பிக்பாஸ் நிகழ்ச்சி பிற மொழியான ஹிந்தியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. என்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்தளிக்க கடமை பட்டிருக்கிறேன். மற்றவர்களுக்கு அல்ல. பிக்பாஸ் என்பது கூடி வாழ்தலின் சாரம்சம். தசாவதாரம் படத்தின் போது என்னை கொண்டாடினார்கள். விஸ்வரூபம் எடுத்தபோது எதிர்க்கிறார்கள்.


கிரிக்கெட் தேவை என்றால் பிக்பாஸூம் தேவை


கிரிக்கெட் எந்த அளவுக்கு தேவையோ அதே அளவுக்கு பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளும் தேவை. சமூக சேவைக்காக நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் என்று சொல்ல நான் அரசியல்வாதி கிடையாது.


தமிழ்தாய் வாழ்த்து கற்பிக்கப்பட்டது


பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்தாயை வாழ்த்தை இழிவுப்படுத்தவில்லை, அங்கு உள்ளவர்களுக்கு கற்று கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தமிழ் தெரிந்தவர்கள் என்றாலும் ஒன்றை கற்றுக்கொடுக்கும் போது சில உச்சரிப்பு பிழைகள் வந்தால் அதை தவறு என்று கூற முடியாது.


கோபம் வரும்


குளிர்பானங்களுக்கு கொடுக்கும் கட்டணத்தை சினிமாவிற்கு கொடுக்காத போது கோபம் வரத்தான் செய்யும். ஜி.எஸ்.டி. வரியை நாங்கள் கோரியது போல் குறைக்கவில்லை. ஆனால் வரி குறைக்கப்பட்டிருக்கிறது. இதை நான் மனதார பாராட்டுகிறேன்.


மார்க் போட விரும்பவில்லை


மத்திய மாநில அரசுகளின் செயல்பாட்டிற்கு மார்க் போட நான் விரும்பவில்லை ஓட்டு போட மட்டுமே கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து துறையிலும் ஊழலும் லஞ்சமும் இருக்கத்தான் செய்கிறது.

ரஜினியையும் விமர்சிப்பேன்
தமிழகத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தில் மாற்றமில்லை. மேஜைக்கு அடியில் நடக்கும் எல்லா பேரங்களையும் தடுத்து நிறுத்த வேண்டும். சிஸ்டம் சரியில்லை என் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே நான் கூறினேன். நான் கூறிய கருத்தை ரஜினியும் கூறியிருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வந்தால் எல்லா கட்சியையும் விமர்சிப்பது போல அவரையும் விமர்சிப்பேன். நல்லது செய்தால் பாராட்டுவேன்.


சைவம் என்பதற்கு வேறு அர்த்தம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் அது மதத்தோடு தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது.


பாவனா கடத்தல் வழக்கில் சட்டம் தன் கடமையை சரியாக செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் பக்கம் நான் உள்ளேன்.


Advertisement
பிக்பாஸில் என்ன ஆபாசம் இருக்கிறது - கமல் கேள்விபிக்பாஸில் என்ன ஆபாசம் இருக்கிறது - ... 'கபாலி' டீசரை முந்திய 'விவேகம்' டீசர் 'கபாலி' டீசரை முந்திய 'விவேகம்' ...


வாசகர் கருத்து (47)

anvar - paramakudi,இந்தியா
17 ஜூலை, 2017 - 10:26 Report Abuse
anvar இவர் தான் தன் மகளுடன் ஜோடியாக நடிக்க முடியும் என்று அறிவாக கூறியவர். மேலும் நடிகை கவுதமியுடன் திருமணம் ஆகாமல் வாழ்ந்தவர். முதலில் விஜய் டிவியையே தடை செய்ய வேண்டும். இவர் என்ன செய்வார் 40 கோடி சம்பளம் ..வாங்குன காசுக்கு பேசுகிறார். இந்த விஷயத்தில் இந்துமக்கள் கட்சியை பாராட்ட வேண்டும். அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
Rate this:
mrsethuraman - Bangalore,இந்தியா
13 ஜூலை, 2017 - 16:42 Report Abuse
mrsethuraman மனைவியுடன் கூட வாழமுடியாதவர்கள் கூடி வாழ்தலை பற்றி கூறுகிறார்கள்
Rate this:
makesan - bangalore,இந்தியா
13 ஜூலை, 2017 - 16:10 Report Abuse
makesan சமூகம் நல்ல இருக்கனும்ந விவசாயம் பண்றது epadi, தெருக்குத்து பத்தி எடுத்து சொல்லு கூட்டு குடும்பமா எப்படி வாழ்வது னு சில பல குடும்பங்களை பிக் பாஸ் ல இன்விடே பண்ணலாம. இருக்கும் மேல ரியாலிட்டி கடனும் ந எல்லைல நமது இந்தியா ராணுவ வீரர்கள் எப்பிடி எல்லாம் கஷ்ட பாருங்க னு ரியாலிட்டி ஆஹ் கட்டலாம் இதெல்லாம் விட்டுட்டு ரியாலிட்டி ஷோ னு கண்டதை கட்டாதிங்க உலக நாயகரே. தமிழா அழிச்சுடாதீங்க .முதல உள்ளூர் நாயகன் அப்புறம் தன உலக நாயகன். முதல எங்கள் வீடு பிள்ளை அப்புறம் தான தமிழ் நாடு பிள்ளை ஆயிடலாம் . இதெல்லாம் பகுத்தறிவை வளர்க்கும் தமிழ் கலாச்சார சீர்கேடு ....
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
13 ஜூலை, 2017 - 14:23 Report Abuse
Vaal Payyan வாங்கின காசுக்கு சரியா பேசி இருக்கிறார் ஒரு வீட்டுல பத்து பேர அடச்சீ வச்சி சண்டை மூட்டி , கச்சா மூச்சா னு பேசி கேவலமா அதற்க்கு விளக்கம் தருகிற இந்த நிகழ்ச்சி எதையும் கெடுக்க வில்லை என்றால் ... வேற என்னதான் சீர் கேடாம் பகுத்தறிவாளன் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் இவர் , எப்படி இந்த கேவலமான நிகழ்ச்சியை நடத்த ஒப்பு கொண்டு விலை போனார் என்பது மட்டும் தெரியவில்லை
Rate this:
s sambath kumar - chennai,இந்தியா
13 ஜூலை, 2017 - 14:16 Report Abuse
s sambath kumar இங்கே பிக் பாசை எதிர்ப்பவர்கள் கேவலமான சீரியல்களை எதிர்க்காதது ஏனோ? பிடிக்கவில்லை என்றால் பார்க்கவேண்டாம்.ஏன் இவ்வளவு வன்மம்?
Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  Tamil New Film ennai nokki paayum thotta
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in