‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் வெங்கட்பிரபு தனக்கு முகவரி கொடுத்த சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகமான 'சென்னை-600028 இரண்டாவது இன்னிங்ஸ்' படத்தை இயக்கினார். அந்தப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. தற்போது வெங்கட் பிரபு இயக்கும் படம் 'பார்ட்டி'.
வெங்கட் பிரபு இயக்கத்தில் 'சரோஜா' படத்தை தயாரித்த 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா பார்ட்டியை தயாரிக்கிறார். சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ஜெயராம், நாசர், சம்பத், ஜெய், 'மிர்ச்சி' சிவா, கயல் சந்திரன், ரெஜினா கெசண்டரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெதுராஜ் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.
இந்த படத்தின் பூஜை இன்று காலையில் எளிமையாக நடைபெற்றது. 'பொதுவாக படத்துக்கு பூஜை போட்டா பார்ட்டி வைப்பாங்க, ஆனால் முதல் தடவையா பார்ட்டிக்கு பூஜை போட்டிருக்கோம்' என்று தனது வழக்கமான ஸ்டைலில் காமெடியாக இந்த பூஜை குறித்து டுவீட் செய்துள்ளார் வெங்கட் பிரபு.
வழக்கமாக வெங்கட் பிரபு இயக்கும் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாதான் இசை அமைப்பார். ஏனோ 'பார்ட்டி' படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவில்லை. வெங்கட்பிரபு தயாரிக்கும் 'ஆர்.கே.நகர்' படத்துக்கு இசையமைத்து வரும் பிரேம்ஜியே பார்ட்டி படத்துக்கும் இசை அமைக்கிறார்.