Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

55 டிகிரி வெயிலில் 'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பு

11 ஜூலை, 2017 - 14:00 IST
எழுத்தின் அளவு:
Dhruva-natchathiram-shooting-in-55-degree-celcius-heat

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளிநாட்டுப் படப்பிடிப்பு கடந்த மாதம் பல்கேரியாவில் ஆரம்பமானது. சுமார் 20 நாட்களாக நடைபெற்ற படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. பல்கேரியாவில் தற்போது 55 டிகிரி வெயில் அடித்துக் கொண்டிருக்கிறதாம்.

சுட்டெரிக்கும் வெயிலில் அனைத்து நட்சத்திரங்களும் கலந்து கொண்டு திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளது படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் சில ஐரோப்பிய நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருட மத்தியில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு விக்ரம் 'ஸ்கெட்ச்' படப்பிடிப்புக்குச் சென்றதால் சின்ன இடைவெளி விழுந்தது. 'ஸ்கெட்ச்' படப்பிடிப்பை விக்ரம் முடித்ததும், 'துருவ நட்சத்திரம்' படப்பிடிப்பை உடனே ஆரம்பித்துவிட்டனர். தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்த பிறகுதான் விக்ரம் 'சாமி 2' படத்தில் நடிக்க உள்ளார்.

கௌதம் மேனன் இயக்கி முடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் முடிவடைந்தும் இன்னும் வெளிவராமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in