ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமந்தாவிற்கு இன்னும் சில மாதங்களில் நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம் நடைபெற உள்ளது. இருந்தாலும் சமந்தாவை ரசிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமிழிலும் தற்போது ஐந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக செயல்பாட்டுடன் இருக்கும் நடிகைகளில் சமந்தா முக்கியமானவர். அவரை டுவிட்டரில் தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 40 லட்சத்தைத் தொட்டுள்ளது. தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களைப் பற்றிய தகவல்கள், விதவிதமான புகைப்படங்கள், பல தகவல்களைப் பகிர்ந்து வருபவர் சமந்தா. அதனால், அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
40 லட்சத்தைத் தொட்டதன் மூலம் சமந்தா, தென்னிந்திய நடிகைகளில் டுவிட்டரில் இரண்டாவது இடத்தில் உள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் 52 லட்சம் தொடர்பாளர்களுடன் முதலிடத்தில் உள்ளார். த்ரிஷா 36 லட்சம், ஹன்சிகா 29 லட்சம், தமன்னா 16 லட்சம், ரகுல் ப்ரீத் சிங் 10 லட்சம் தொடர்பாளர்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.