ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாளத்தில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக கோலோச்சிய மேனகா சுரேஷ், தற்போது தனது இளையமகள் கீர்த்தி சுரேஷை முன்னணி ஹீரோயினாக்கி அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷ், கடந்த வருடம் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது.
வெளிநாட்டுக்கு சென்று வி.எப்.எக்ஸ் பற்றி ஐந்து வருடம் படித்துவிட்டு வந்த இவர், தங்கையைப்போல சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இல்லாதவர்.. அதனால் ரேவதி கலாமந்திர் என்கிற பிலிம் அகாடமியை ஆரம்பித்து கடந்த ஒரு வருடமாக நடத்தி வருகிறார்.
தற்போது இந்த ரேவதி கலாமந்திர் மூலமாக 'மேட்ச் பாக்ஸ்' என்கிற படத்தை தயாரித்துள்ளார் மேனகா சுரேஷும் அவரது கணவர் சுரேஷ்குமாரும். இந்தப்படத்தில் 'ஆனந்தம்' படத்தின் மூலம் புகழ்பெற்ற ரோஷன் மேத்யூ மற்றும் 'ஹேப்பி வெட்டிங்' புகழ் த்ரிஷ்யா ரகுநாத் ஆகியோர் நடிக்கின்றனர். சிவராம் மோனி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் டீசரை இன்று மோகன்லால் வெளியிட்டார்.