பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாகுபலி படத்தில் இரண்டு பாகங்களிலும் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது. கதையின் முக்கிய ஆதாரமாக இருந்த அந்த கதாபாத்திரம் ரம்யாகிருஷ்ணனின் திறமைக்கு நல்லதொரு சான்றாக அமைந்தது. அதையடுத்து இப்போது தமிழில், கமலுடன் சபாஷ் நாயுடு, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களிலுமே அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரம்யாகிருஷ்ணன்.
இதேபோல் தெலுங்கிலும் ரம்யாகிருஷ்ணனுக்கு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களாக கிடைத்து வருகிறது. அந்தவகையில், தற்போது நாரா ரோஹித் - ரெஜினா ஜோடி சேர்ந்து நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் கிட்டத்தட்ட இன்னொரு ஹீரோ போன்ற எதிரும் புதிருமான ஒரு அரசியல்வாதி வேடத்தில் நடித்து வருகிறார் ரம்யாகிருஷ்ணன். இந்த படத்தில் நாரா ரோஹித் - ரம்யாகிருஷ்ணனை சுற்றித்தான் மொத்த கதையும் பின்னப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் டீசர் ஜூலை 25-ந்தேதி வெளியாகிறது.