மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகையாக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருக்கும் அனுஷ்கா சர்மா, என்ஹெச் 10, பில்லாரி என்ற இரண்டு படங்களை தயாரித்தார். இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இப்போது மூன்றாவது படமாக பரி என்ற படத்தை நடித்து, தயாரிக்கிறார். அனுஷ்காவுடன் பரம்பிரதா சாட்டர்ஜி முக்கிய ரோலில் நடிக்க, புரொசித் ராய் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், பரி படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் கூடிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் பரி படம் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி ரிலீஸாகிறது. என்ஹெச் 10 போன்று பரி படமும் ஒரு த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது.