ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் ராரண்டாய் வேதுக சுதம் படத்தை அடுத்து நாக சைதன்யா நடித்து வரும் படம் யுத்தம் சரணம். இதுவரை ரொமான்டிக் கதைகளாக நடித்து வந்த அவர் முதன்முறையாக ஆக்சன் திரில்லர் கதையில் நடிக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தின் டைட்டீல் யுத்தம் சரணம் என்று அறிவிக்கப்பட்டபோது தெலுங்கு திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்தது. காரணம், அந்த அளவுக்கு நாக சைதன்யாவுக்கு பவர்புல்லான டைட்டீலாக அமைந்துள்ளதாம். அதோடு, இந்த படத்தின் கதையை இயக்குனர் கிருஷ்ணா ஆர்.வி.மாரிமுத்து முதலில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷிடம் தான் சொன்னாராம். கதையைக் கேட்ட அவர், இதில் நான் நடிப்பதைவிட வளர்ந்து வரும் ஒரு ஹீரோ நடித்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி, நாகசைதன்யாவை இந்த கதையில் நடிக்க சிபாரிசு செய்தாராம். ஆக, வெங்கடேஷ் நடிக்க வேண்டிய கதையில் நாக சைதன்யா நடித்து வருகிறார்.