மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
வாரிசுகள் நடிகர்களாக அறிமுகமாகும் வரிசையில் புதிய வரவாக இணைந்துள்ளார் மோகன்லாலின் மகன் பிரணவ். இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு 'ஆதி' என டைட்டில் வைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன் படத்திற்கான பூஜையும் போடப்பட்டது.. நடிகர் முகேஷ், பிரணவின் தந்தையாக நடிக்கிறார். அதேசமயம் இன்னும் படத்தில் நடிக்கும் கதாநாயகி உட்பட மற்றவர்கள் முடிவாகவில்லை.
ஆனால் படத்தில் பிரணவுக்கும் கதாநாயகிக்குமான காதல், ரொமான்ஸ் காட்சிகள் என எதுவும் இல்லை என இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். படம் ஆக்சன் த்ரில்லராக உருவாகிறது என்றாலும் ஹீரோவுக்கு காதல் காட்சி இல்லை என்பதை பிரணவ் ஏற்றுக்கொண்டாரா என்றால் அதிலும் ஒரு ஆச்சர்யம் வைத்திருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப். ஆம்.. இந்த படத்தில் காதல் காட்சிகள் இல்லை என்பதுதான் பிரணவை இந்தக்கதையை உடனே ஒகே சொல்லவைத்ததாம். பிரணவ் கொஞ்ச கூச்ச சுபாவம் கொண்டவர் என்பதால், ரொமான்ஸ் விஷயங்களை அடுத்த படத்தில் இருந்து பார்த்துக்கொள்ளலாம் என நினைக்கிறாராம்.