தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்தியாவில் நான்கு மொழிகளில் வெளியானது. அதையடுத்து பல்வேறு அயல்நாடுகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. அதையடுத்து, தற்போது பிரபாஸ் நடிக்கும் சாஹோ படம் நான்கு மொழிகளில் நேரடியாக தயாராக உள்ளது. இந்தநிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்து வரும் ஸ்பைடர் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நேரடியாக தயாராகியுள்ளது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது. முக்கியமாக சில கிராபிக்ஸ் காட்சிகள் வெளிநாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், செப்டம்பர் 27-ந்தேதி இப்படம் வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், இந்த ஸ்பைடர் படத்தை தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தி, மலையாளத்திலும் டப் செய்து ஒரே நாளில் நான்கு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.