வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் தோல்வியடைந்ததோடு, அப்படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பனுக்கும் நஷ்டத்தையும் ஏற்படுத்திவிட்டது. இன்னொரு பக்கம், இனி சிம்பு நடித்த படத்தை பார்க்கவே கூடாது என்று அவரது ரசிகர்களே புலம்புகிற அளவுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கொடுத்துவிட்டது ஏஏஏ படம்.
ஏஏஏ படத்துக்கு ஏற்பட்ட கதி காரணமாக இப்போதைக்கு சிம்புவை வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை. எனவே ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு, டிராப் பண்ணப்பட்ட 'கெட்டவன்' படத்தை மீண்டும் எடுக்கும் முயற்சியில் சிம்பு இறங்கியுள்ளார். நமீதா, லேகா வாஷிங்டன், சந்தானம் ஆகியோருடன் துவங்கிய 'கெட்டவன்' படத்தை அப்படியே கைவிடப்பட்டுதான் சிம்பு அடுத்தடுத்து வேறு படங்களில் நடிக்க துவங்கினார்.
இப்போது 'கெட்டவன்' கதையை சிம்புவுடன் வேறு நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் சிம்பு. இதுகுறித்து எந்த அதிகார்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்றாலும் தற்போதைக்கு சிம்புவுக்கு இதைத்தவிர வேறு வழியில்லை.