'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
அண்மையில் விவாகரத்து செய்து கொண்ட இயக்குநர் ப்ரியதர்ஷன் - லிஸி தம்பதியின் மகள் கல்யாணி. இருமுகன் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ள இவர் இன்னொரு பக்கம் நடிக்கவும் முயற்சி செய்து வந்தார்.
தமிழில் மகளை கதாநாயகியாக அறிமுகப்படுத்த பல்வேறு முன்னணி இயக்குநர்களிடம் கல்யாணியின் புகைப்படங்கள் அனுப்பி வைத்து சான்ஸ் வேட்டை நடத்தினார் லிஸி. ஆனால் பல இயக்குநர்கள் கல்யாணியை நிராகரித்துவிட்டனர். எனவே வெறுத்துப்போன லிஸி, தன்னுடைய தாய்மொழியான மலையாளத்தில் மகளுக்கு சான்ஸ் தேட ஆரம்பித்தார்.
மலையாளத்தில் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் ப்ரணவ் நடிக்கவுள்ள ஆதி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்தப்படத்தின் கதாநாயகியாக கல்யாணி நடிக்க இருப்பதாக தகவல் உள்ளது.
இந்நிலையில் தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கல்யாணி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நாகார்ஜூனா மகன் அகில் நாயகனாக நடிக்கவுள்ள இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.