'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
யு டியூப், பேஸ்புக் ஆகிய தளங்களில் டீசர்கள், டிரைலர்கள், முதல் பார்வை, மோஷன் போஸ்டர் ஆகியவற்றிற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துதான் இன்றைய ஹீரோக்களுக்கு அவர்களுடைய ரசிகர்களிடமும், மற்ற ரசிகர்களிடமும் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறது என்பது கணிக்கப்படுகிறது.
இணைய தளங்களில் பதிவேற்றப்படும் மேற்படி விஷயங்களைப் பொறுத்தவரையில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோருக்குத்தான் எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வரவேற்பை இப்போது தனுஷ் பெற்றுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் டிரைலர், அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டீசரை விட பார்வைகளின் எண்ணிக்கையில் தாண்டியுள்ளது.
விவேகம் டீசருக்கு யு டியூபில் இதுவரை 1 கோடியே 71 லட்சம் பார்வைகள் பார்த்துள்ளனர். அதே சமயம், வேலையில்லா பட்டதாரி 2 டிரைலருக்கு யு டியூபில் 81 லட்சம் பார்வைகளும், ஃபேஸ்புக்கில் 54 லட்சம் பார்வைகளும், தெலுங்கில் யு டியூபில் 51 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளன. மொத்தமாக டிஜிட்டல் தளத்தில் 1 கோடியே 86 லட்சம் பார்வைகள் கிடைத்து விவேகம் டீசரின் சாதனையை மிஞ்சியிருக்கிறது. அஜித்திற்கு பேஸ்புக், டுவிட்டர் போன்ற இதர டிஜிட்டல் தளம் கிடையாது. எனவே தனுஷின் விஐபி 2 டிரைலர், விவேகத்தை முந்தியிருக்கிறது.
அது மட்டுமல்ல விவேகம் டீசரை யு டியூபில் டிஸ்லைக் செய்துள்ளவர்கள் மட்டும் 73 ஆயிரம் பேர். ஆனால், விஐபி 2 டிரைலரை வெறும் 7 ஆயிரம் பேர் மட்டுமே டிஸ்லைக் செய்துள்ளனர்.
அஜித் நடித்து வெளிவரும் படங்களுக்கு தமிழில் மட்டுமே வரவேற்பு உள்ளது. அவருடைய படங்களுக்கு தெலுங்கில் வரவேற்பு கிடையாது. ஆனால், தனுஷ் நடித்துள்ள விஐபி 2 டிரைலருக்கு தெலுங்கில் கிடைத்துள்ள வரவேற்பு தெலுங்குத் திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.