'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1997-ம் ஆண்டு அமீர்கான், அஜய் தேவ்கன், கஜோல், ஜூகி சாவ்லா நடிப்பில் வெளியான படம் இஷ்க். இப்படத்தில் இடம்பெற்ற "நீன்த் ஜூவாரி மேரி..." என்ற பாடல் மிக பிரபலம். இப்போது இந்தப்பாடலை, கோல்மால் அகைன் படத்திற்காக ரீ-மேக் செய்ய இருக்கிறார்கள். அஜய் தேவ்கன் - பரிணிதி சோப்ரா இப்பாடலுக்கு ஆட, பாடகர் அர்மான் மாலிக் இப்பாடலை பாட உள்ளார்.
இதுகுறித்து அர்மான் மாலிக் கூறியிருப்பதாவது... "கோல்மால் அகைன் படத்தில் இரண்டு பாடல்கள் பாடுகிறேன். அதில் ஒன்று இஷ்க் படத்தில் இடம்பெற்ற நீன்த் ஜூவாரி பாடல். இந்தப்பாடல் மூலம் எனக்கு பொறுப்பு அதிகமாகியுள்ளது. முடிந்தவரை ராப்பை புகுத்தாமல் பழைய பாடலின் தன்மையை மாற்றாமல் பாட முயற்சிப்பேன்" என்று கூறியுள்ளார்.
கோல்மால் அகைன் படத்தில் அஜய், தபு, பரிணிதி சோப்ரா, அர்ஷத் வர்சி, துஷார் கபூர், குணால் கேமு என... ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். காமெடி படமாக உருவாகும் இப்படத்தை ரோகித் ஷெட்டி இயக்குகிறார். வருகிற தீபாவளி நாளில் படம் ரிலீஸாக உள்ளது.