பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக உருவாகியுள்ளது அக்ஷ்ய் குமாரின் "டாய்லெட் ஏக் பிரேம் கதா" படம். ஸ்ரீ நாராயணன் சிங் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. புகுந்த வீட்டிற்கு செல்லும் மணமகள், அந்த வீட்டில் கழிவறை இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதன்பின்னர் மணமகன், தன் வீட்டிற்கு கழிவறை கொண்டு வருவதோடு, தனது ஊருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்று இக்கதை உருவாகியுள்ளது.
இந்நிலையில் இப்படம் முதலில் ஹீரோயினை முதன்மைப்படுத்தி தான் உருவாக்க எண்ணியிருந்தாராம் இயக்குநர். அதற்காக நடிகை சோனாக்ஷி சின்ஹாவை டாய்லெட் படத்தில் நடிக்க கேட்டனர். ஆனால் அவர் நூர் படத்தில் பிஸியாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து தான் ஹீரோவை முதன்மைப்படுத்தி கதையை மாற்றி, அதில் அக்ஷ்ய்யை ஹீரோவாக்கி படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர். இயக்குநர் எதிர்பார்த்ததை போலவே படமும் சிறப்பாக வந்துள்ளதாம்.
டாய்லெட் படம் வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாக உள்ளது.