Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாக்காரர்களுக்கும் பிரச்னைகள் உள்ளது - ஆர்.ஜே.பாலாஜி

08 ஜூலை, 2017 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Cinema-people-also-having-problem-says-RJ-Balaji

சமீபகாலமாக பல வீடியோ ஜாக்கிகள், ரேடியோ ஜாக்கிகள் சினிமாவில் நடிகர்களாகி வருகிறார்கள். அவர்களில் மிர்ச்சி சிவா, மிர்ச்சி செந்தில் வரிசையில் ஆர்.ஜே.பாலாஜியும் ஒருவர். சமீபகாலமாக இவர் பேசும் காமெடிகளுக்கு தியேட்டர்களில் கைதட்டல் அதிகரித்து வருகிறது. அதனால் பல படங்களில் நடிக்கும் பிசியான காமெடியனாகி விட்டார் அவர்.

அந்த வகையில் காற்று வெளியிடை, இவன் தந்திரன் படங்களைத் தொடர்ந்து தற்போது தானா சேர்ந்த கூட்டம், வேலைக்காரன், யங் மங் சங், ஸ்பைடர் என பல படங்களில் நடித்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இதில் கடந்த வாரம் வெளியான இவன் தந்திரன் படத்தில் கெளதம் கார்த்தியுடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர் காமெடியன் என்றாலும், பல காட்சிகளில் கெளதம் கார்த்தியை விட ஆர்.ஜே.பாலாஜிதான் அதிக டயலாக் பேசியிருக்கிறார். அந்த அளவுக்கு அவருக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் டைரக்டர் ஆர்.கண்ணன்.

அதனால் இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார் ஆர்.ஜே.பாலாஜி. ஆனால் இவன் தந்திரன் வெளியாகி மூன்று நாட்களில் தியேட்டர் ஸ்டிரைக் வந்ததால் படத்தின் வசூல் பாதித்தது. இருப்பினும் நேற்று முதல் மீண்டும் அப்படம் திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில், என்னைப் போன்ற நடிகர்கள் இந்த படம் இல்லேன்னா அடுத்த படத்திற்கு போய் விடுவோம். ஆனால் இவன் தந்திரன் படத்தை இயக்கி தயாரித்துள்ள ஆர்.கண்ணன் போன்றவர்களுக்கு படம் ஓடவில்லையென்றால் பெரிய இழப்பாகி விடும். கோடிகளில் புரளும் சினிமாக்காரர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் எங்களுக்கும் நிறைய பிரச்சினைகள் உள்ளது என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in