பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம் விவேகம். அஜித் உடன் ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.
90 சதவீதம் படம் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் பாணியில் உருவாகியுள்ள விவேகம் படத்தில் அஜித், உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்தின் டீசர், சர்வைவா என்ற ஒரு பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் அடுத்தப்படியாக விவேகம் படத்திலிருந்து மற்றுறொரு பாடலை ரிலீஸ் செய்ய உள்ளார்கள். "தல விடுதலை..." என தொடங்கும் இப்பாடல் வருகிற ஜூலை 10-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை இயக்குநர் சிவாவே எழுதியிருக்கிறார்.
சர்வைவா பாடலை போன்று தல விடுதலை பாடலையும் டிரெண்ட்டாக்கவும், ஹிட்டாக்கவும் அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.