நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
ஜெயம் ரவியை வைத்து 'மிருதன்' படத்தை இயக்கியவர் சக்தி சௌந்தர் ராஜன். அந்தப் படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜனும், 'ஜெயம்' ரவியும் இணைந்துள்ள படம் 'டிக் டிக் டிக்'. விண்வெளி சம்பந்தப்பட்டை சயின்ஸ்ஃபிக்ஷன் படமாக உருவாகி வரும் படம் இது.
ராக்கெட்டை அனுப்பும்போது நேரத்தை முடிவு செய்த பின் கவுண்டவுன் அறிவிக்கப்படும். அதை குறிக்கும் வகையிலேயே டிக் டிக் டிக் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்திற்காக சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் மிகப் பிரம்மாண்டமான ஒரு செட் அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். இப்போது டிக் டிக் டிக் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாம்.
'நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ்' தயாரிக்கும் இந்த படத்தில் 'ஜெயம்' ரவியுடன் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். வில்லனாக அரோன் அசீஸ் நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.
'ஜெயம்' ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வனமகன்' தியேட்டர் ஸ்டிரைக்கால் பிரச்னையை சந்தித்தது. தற்போது இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில், ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்த வெளியீடாக 'டிக் டிக் டிக்' விரைவில் வெளியாகிறது.