‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா. தற்போது இவர், இரட்டை இயக்குநர்கள் ராஜ் மற்றும் கிருஷ்ணா டிகே இயக்கத்தில் உருவாகி வரும் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கிறார். சித்தார்த் ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார். ஜென்டில்மேன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சித்தார்த், ஜென்டில்மேன் போன்று பார்மல் உடையணிந்து புன்னகையுடன் தோன்றுகிறார். மியாமியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சித்தார்த் வேலை பார்ப்பது போன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆகஸ்ட் 25-ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. ஜென்டில்மேன் படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிக்கிறது.