ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ஹே ஜூட்'.. இந்த மலையாள படம் ரசிகர்களின் உடனடி கவனத்துக்கு ஆளாகி இருக்கிறது.. காரணம் இந்தப்படத்தின் ஹீரோவாக நிவின்பாலி நடிப்பதால் அல்ல.. கதாநாயகியாக முதன்முதலாக மலையாள திரையுலகில் த்ரிஷா அடியெடுத்து வைக்கும் படம் என்பதற்காக.. த்ரிஷா, பீல்டுக்கு வந்து 17 வருடங்கள் ஆகின்றன.. இத்தனை வருடங்களில் கதாநாயகியாக மட்டுமே நடித்துவரும் த்ரிஷா, ஆரம்பத்தில் தமிழுக்கும் தெலுங்கிற்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார். ஆனால் நடிப்பிற்கு தீனிபோடும் மலையாளப்படங்களில் அவர் இதுவரை நடிக்கவே இல்லை. அந்த மனக்குறையை தீர்க்கும் விதமாக 'ஹே ஜூட்' பட வாய்ப்பு அவரை தேடிவந்துள்ளது..
இந்தப்படத்தின் பூஜை சமீபத்தில் கோவாவில் நடைபெற்றது. பூஜையுடன் படப்பிடிப்பும் ஆரம்பித்துவிட்டது. கோவாவை சுற்றியே இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் த்ரிஷா கிறித்தவ பெண்ணாக நடிக்கிறாராம். இந்தப்படத்தை ஷ்யாம் பிரசாத் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே, நிவின்பாலி, பிருத்விராஜ் இருவரும் இணைந்து நடித்த 'இவிடே' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அழகான காதல் கதையாக இந்தப்படம் உருவாகிறதாம்.